×

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா, நாராயணா முழக்கங்களுக்கு இடையே வைகை ஆற்றில் எழுந்தருளி அருள் பாலித்தார். வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரையில் வந்த அழகரை வெள்ளிக் குதிரையில் வந்த வீரராகவ பெருமாள் வரவேற்றார். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியதால் மழை பொலிந்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிநின்று தரிசித்தனர்.

The post சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் appeared first on Dinakaran.

Tags : Chitra festival ,Kallazhagar ,Vaigai River ,Madurai ,Devots' ,Govinda ,Narayana ,Vaigai ,Kallahagar ,
× RELATED புதூர்-மடப்புரம் இடையே வைகை ஆற்றின்...