×

வேதாரண்யம் அருகே பழமை வாய்ந்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

வேதாரண்யம், ஏப்.23: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பழமை வாய்ந்த உடைய அய்யனார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 20ம் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் துவங்கிய நிகழ்ச்சியில் தொடர்ந்து வாஸ்து சாந்தி லஷ்மி ஹோமம், ரக்ஷபந்தனத்துடன் முதல் காலயாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகளுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்று சிறப்பு தீபாராதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைபெற்றது.

மங்கல வாத்தியம் முழங்க புனிதநீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக புனிதநீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து உடைய அய்யனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post வேதாரண்யம் அருகே பழமை வாய்ந்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Ancient Ayyanar Temple ,Kumbabishekam ,Vedaranyam ,Ashdabantana Maha ,Kumbapishekam ,Nagai district ,Vastu Shanti Lashmi Homam ,Rakshapandana ,Vikneshwara Pooja ,
× RELATED மண்ணச்சநல்லூரில் ரூ.38 லட்சம் செலவில்...