×

கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

போடி, ஏப், 23: போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ கண்ணன் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளிலும் தீவிர ரோந்து பணிகளை தொடர்ந்து வருகின்றனர். இதன்படி போடி மரிமூர் கண்மாய் சாலை கொட்டகுடி ஆற்றுப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் போடி புதூரைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் கார்த்திக் (42) என, தெரியவந்தது, அவரிடம் பறிமுதல் செய்த துப்பாக்கியை, காவல் நிலையம் கொண்டு வந்து துப்பாக்கிகளை கையாளும் வல்லுநர்கள் உதவியுடன் போலீசார் சோதனை செய்தனர். அப்போது விலங்குகளை வேட்டையாடுவதற்கான ஏர்கன் கொண்ட துப்பாக்கியை, பலூன் சுடும் துப்பாக்கி போல் உருமாற்றம் செய்து வைத்திருந்தது உறுதியானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா உத்தரவின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை செய்து செய்தனர்.

The post கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bodi ,SI Kannan ,Bodi Nagar Police Station ,Kotakudi River ,Bodi Marimur Kanmai Road ,
× RELATED புகையிலை விற்ற 3 பேர் கைது