×

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

போடி ஏப். 23: போடி புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் சரவணன் (32). இவரது மனைவி பாண்டிமீனா அதே பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் அருண்குமார் (22). இந்நிலையில் அருண்குமாருக்கும் பாண்டிமீனாவிற்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சரவணனும் அவரது தந்தையும் சேர்ந்து கண்டித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இருவரும் அருண்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதற்கு பதிலடியாக, அருண்குமார் தனது நண்பர் ேகசவன் என்பவருடன் சேர்ந்து கற்களால் சரவணை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த இருவரும் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், நான்கு பேர் மீதும் போடி நகர் போலீஸ் எஸ்.ஐ இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post வாலிபருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Saravanan ,Bodhi Budur ,Pandimeena ,Kalyanasundaram ,Arunkumar ,Pandemina ,
× RELATED முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட்