- உலக புவி நாள்
- ராமநாதபுரம்
- சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம்
- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம்
- மாவட்ட விளையாட்டு அதிகாரி
- தினேஷ் பாபு
- தின மலர்
ராமநாதபுரம், ஏப்.23: ஒவ்வொரு ஆண்டும் உலக பூமி தினம் ஏப்.22ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் உலக பூமி தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்பாபு தலைமை வகித்தார். திருஉத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தடகள பயிற்சியாளர் ஹனிபா வரவேற்றார். நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ,மாணவியர், விளையாட்டு வீரர்கள், வீரங்கனைகள் கலந்து கொண்டனர்.
The post உலக பூமி தினம் appeared first on Dinakaran.