- மருதானடி அணை
- சித்ரா விழா
- பட்டிவீரன்பட்டி
- வரதராஜ பெருமாள்
- சித்தரே
- சித்ராய் திருவிழா
- இந்து மதம் மகளிர் அறக்கட்டளை துறை
- வரதராஜ பெருமாள்
- அய்யம்பலயம் மருதனாடி
- வெளியீடு
பட்டிவீரன்பட்டி, ஏப்.23: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில் வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவினை முன்னிட்டு வரதராஜ பெருமாள் இன்று அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியினை காண சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதனை முன்னிட்டு அய்யம்பாளைம் மருதாநதி அணையிலிருந்து 40 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவிற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.