×

பி.எஸ்.பி போட்டி வேட்பாளருக்கு போலி ஆவணம் தயாரித்த சமாஜ்வாடி வேட்பாளர்

பரைய்லி: உபியின் அன்லா தொகுதி பிஎஸ்பி வேட்பாளராக அபித் அலி போட்டியிடுகிறார். அதே தொகுதியில் சத்யவீர் சிங் என்பவரும் பிஎஸ்பி வேட்பாளர் என்று கூறி வேட்புமனுதாக்கல் செய்தார். ஒரு தொகுதியில் ஒரே கட்சியை சேர்ந்த 2 பேர் போட்டியிடுவது குறித்த தகவல் வந்ததும் தேர்தல் ஆணையமும் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இதில் அதிகாரப்பூர்வ வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கும் சூழல் உருவாகியது. அப்போது பிஎஸ்பி கட்சி அபித் அலி தான் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் என்று அறிவித்தது. இதையடுத்து சத்யவீரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது குறித்து பிஸ்பி வேட்பாளர் அபித் அலி சத்யவீர் சிங்குக்கு போலி ஆவணங்களை தயாரிக்க உதவி செய்தது சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் நீரஜ் மவுர்யா என காவல்துறையில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலி ஆவணம் தயாரிப்பு, மோசடி ஆகிய புகார்களின் அடிப்படையில் மவுர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரி ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். ஆனால் நீரஜ் மவுர்யா கூறுகையில்,‘‘ தொகுதியில் என்னுடைய செல்வாக்கு அதிகரித்துள்ளதால் கலக்கமடைந்த எதிர்க்கட்சியினர் என்மீது வழக்கு பதிந்துள்ளனர்.காவல்துறை விசாரணையில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

The post பி.எஸ்.பி போட்டி வேட்பாளருக்கு போலி ஆவணம் தயாரித்த சமாஜ்வாடி வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : Samajwadi ,Abid Ali ,UP ,Anla ,Satyaveer Singh ,Dinakaran ,
× RELATED தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை...