×

குழந்தைகளை விட்டு வேலைக்காக மனைவி லண்டன் சென்றதால் போலீஸ் ஏட்டு தற்கொலை

கோவை: கோவையில் குழந்தைகளை விட்டு மனைவி வேலைக்காக லண்டன் சென்றதால் விரக்தியடைந்த போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார். கோவை கணபதிமாநகரை சேர்ந்தவர் பாலகுமார் (38). இவர் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் மனைவி பிரபலமான ஸ்டார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பின்னர் பதவி உயர்வு பெற்று அவர் லண்டனில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்கு மாற்றப்பட்டார். இவர்களது 2 குழந்தைகளும் சேலத்தில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகளை விட்டுவிட்டு தனியாக லண்டனுக்கு தனது மனைவி வேலைக்கு சென்றதால் பாலகுமார் விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 19ம் தேதி தேர்தல் பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு மறுநாள் காலையில் வீட்டுக்கு சென்றார். பின்னர் 2 நாட்கள் வேலைக்கு செல்லவில்லை. பாலகுமாரின் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கே பாலகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குழந்தைகளை விட்டு வேலைக்காக மனைவி லண்டன் சென்றதால் போலீஸ் ஏட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : London ,Coimbatore ,Balakumar ,Ganapathimanagar, Coimbatore ,Saravanampatti Police Station ,
× RELATED புளூ டிக் குறியீட்டில்...