- இந்திய தேர்தல் ஆணையம்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- பிரதமர் மோடி
- இந்தியா
- மோடி
- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
சென்னை: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் கோபத்துக்கு அஞ்சி பிரதமர் மோடி மதவெறியை தூண்டுகிறார். மோடியின் தோல்விகளை அம்பலப்படுத்துவதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் வகையில் விஷமத்தனமாக மோடி பேசியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடி வழங்கும் உண்மையான உத்தரவாதங்கள். சமூக, பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மோடியின் அப்பட்டமான வெறுப்பு பேச்சை தேர்தல் ஆணையம் காதில் வாக்கிகொள்ளவே இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற முறையில் நடுநிலையை கைவிட்டு விட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் சமுக ரீதியில் பிந்தங்கியவர்கள் உரிய பங்கை பெறுவதை மோடி தடிக்கிறார். பாஜகவின் திசைதிருப்பும் உத்திகள் குறித்து இந்தியா கூட்டணித் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
The post இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை கைவிட்டு விட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம் appeared first on Dinakaran.