×

விருது தொகையில் சமூக சேவை பள்ளி மாணவியின் அரிய பணி

திருச்சி: திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மோகன்- பிரபா தம்பதியின் மகள் சுகித்தா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இவர் தான் சேகரித்து வைக்கும் பணம் மற்றும் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று கிடைக்கும் பரிசுத்தொகையை வைத்து ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு பண்டிகை காலங்களில் புத்தாடை, குளிர்காலத்தில் கம்பளி, போர்வை மற்றும் உணவுகளை வாங்கி கொடுத்து வருகிறார்.

இந்தநிலையில் சிலம்பத்தில் உலக சாதனை நிக ழ்த்தி தொடர் சமூக சேவை மற்றும் பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்து வரும் சுகித்தாவுக்கு மாநில அரசு, பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்கான விருது மற்றும் ரூ.1 லட்சம் காசோலை வழங்கி சிறப்பித்தது. இந்த தொகையை பல்வேறு சமூக சேவைகளுக்காக சுகித்தா பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று திருச்சி குட்ஷெட் பாலம், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, பாலக்கரை உள்ளிட்ட பகுதியில் கொளுத்தும் வெயிலில் வியாபாரம் செய்துகொண்டிருந்த வியாபாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 60 குடைகள், 200 பனை ஓலை விசிறிகளை சுகித்தா இன்று வழங்கினார். இவருடன் அவரது சகோதரர் சுஜித்துடன் உடனிருந்தார்.

The post விருது தொகையில் சமூக சேவை பள்ளி மாணவியின் அரிய பணி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Sukitha ,Mohan-Prabha ,Subramaniapuram ,sylamba ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...