- 37 வது வருடாந்திர தீ குழி விழா
- ஸ்ரீ தேவிலோகாமாத்தம்மன் கோயில்
- திருவள்ளூர்
- 37வது வருடாந்திர திமிட்டி திருவிழா
- தேவி லோகமாத்தம்மன் கோயில்
- மாவட்டம்
- கோ பூஜா
- மகாகணபதி
- நவக்கிரகா
- ஹோமா
- ஆண்டு தீ குழி விழா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தேவி லோகமாத்தம்மன் கோயிலில் 37 வது ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 18ம் தேதி காலை கோ பூஜை, மகா கணபதி, நவக்கிரக ஹோமத்துடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு நாகாத்தம்மன் புற்று பூஜையும் 10 மணிக்கு பூ கரகம், திருவீதி உலாவும் நடைபெற்றது.
இதன்பிறகு மாலை 5 மணிக்கு மாததாங்கி திருக்கல்யாணமும் இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி லோகமாத்தம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. 20ம் தேதி காலை 11 மணியளவில் பரசுராமர் மற்றும் போத்ராஜா மஹா தீபாராதனையும் மாலை 5 மணியளவில் பரசுராமன் தபசு மரம் ஏறுதலும 6 மணியளவில் வணம்கடித்தாலும் நடைபெற்றது.
நேற்று 8 மணி அளவில், மகா தீபாராதனையும் 11 மணியளவில் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும் ஒரு மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. மாலை 5 மணியளவில், தேவி லோகமாத்தம்மன் வர்னிப்பு நிகழ்ச்சியும் 6 மணியளவில் பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் தீமிதி திருவிழாவும் 7 மணியளவில் புஷ்ப அலங்காரத்தில் தேவி லோகமாத்தம்மன் பவானி வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஆலய அறங்காவலர் ந.நாகராஜன், விழா குழு மற்றும் திருவள்ளூர் நகர பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post ஸ்ரீ தேவிலோகமாத்தம்மன் கோயிலில் 37ம் ஆண்டு தீ மிதி விழா appeared first on Dinakaran.