ஜெய்ப்பூர்: நீர்ப்பாசன திட்டத்திற்காக ₹50 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ₹9 கோடிக்கு விற்றது ஏன்? என்று ராஜஸ்தான் பாஜக முதல்வரிடம் அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார். ராஜஸ்தானில் கடந்த 19ம் தேதி 12 லோக்சபா தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆளும் பாஜக விவசாய துறை அமைச்சர் கிரோதிலால் மீனா, அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ராஜஸ்தானின் கிழக்கு மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்ட நீர்பாசன கால்வாய் திட்டத்தில், குறைந்த விலைக்கு அரசின் நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. ஆல்வாரில் இருந்து ஈ.ஆர்.சி.பி.க்கு செல்லும் சாலையில் விற்கப்பட்ட நிலங்களில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
இந்த நிலத்தை அழித்ததால் 35 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வெறும் ஒன்பது கோடி ரூபாய் மட்டுமே விற்றுள்ளனர். சட்டவிரோதமாக நிலத்தை விற்பனை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.
The post நீர்ப்பாசன திட்டத்திற்காக ₹50 கோடி அரசு நிலத்தை ரூ.9 கோடிக்கு விற்றது ஏன்..? பாஜக முதல்வரிடம் மாநில அமைச்சர் கேள்வி appeared first on Dinakaran.