புதுடெல்லி: டெல்லி குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள பயங்கர த விபத்துக்குமத்தியில் பாஜக – ஆம்ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள காஜிபூர் குப்பை கிடங்கில் நேற்று மாலை பரவத் தொடங்கிய பயங்கர தீ, இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி உள்ளனர். நேற்று மாலை தொடங்கி இன்று காலை வரை 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திலேயே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா வெளியிட்ட பதிவில்,
காஜிபூர் குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள பயங்கர தீயால், நகரம் முழுவதும் நச்சுப் புகை பரவியுள்ளது. கெஜ்ரிவாலின் பொய்களைப் போலவே இந்தப் புகையும் விஷத்தன்மையானது, முடிவில்லாதது. கடந்த 2022 மாநகராட்சி தேர்தலின் போது, குப்பை கிடங்கு இடத்தை காலி செய்வதாக கெஜ்ரிவால் உறுதியளித்திருந்தார். ஆனால், குப்பை கிடங்கின் உயரம் அதிகரித்துள்ளதே தவிர, குப்பை கிடங்கு அப்புறப்படுத்தபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லி ஆம்ஆத்மி மேயர் ஷெல்லி ஓபராய் வெளியிட்ட பதிவில்:
அனைத்து மூத்த அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். நான் தற்போது டெல்லியில் இல்லை; துணை மேயர் மீட்புப் பணியை கவனிக்கிறார். கோடை காலம் என்பதால் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
The post நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி குப்பை கிடங்கில் பயங்கர தீ: பாஜக – ஆம்ஆத்மி இடையே மோதல் appeared first on Dinakaran.