×

பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க ஆர்வம்: உணவுடன் நள்ளிரவே பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர்

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் எல்.கே.ஜி. சேர்க்கைக்காக தனியார் பள்ளி முன்பு விடிய விடிய பெற்றோர் காத்திருந்து விண்ணப்பங்களை பெற்று சென்றனர். பாளையங்கோட்டையில் இயங்கி வரும் லயோலா கான்வென்ட் தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை கற்றுத்தரப்படுகிறது. ஒழுக்கம் மற்றும் கல்வியில் இந்த பள்ளி சிறந்து விளங்குவதாக சுற்றுவட்டாரத்தில் பெயர் பெற்றுள்ளது. இதனால் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் போட்டி இருக்கும்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு எல்.கே.ஜி. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை அறிந்த பெற்றோர் நள்ளிரவே சாப்பாட்டுடன் பள்ளிக்கு சென்று விடிய விடிய வாசலிலேயே காத்திருந்தனர். பிரச்சனை ஏற்படுவதை தடுக்க முதலில் வந்தவர்களை பெயர்களை தங்களுக்குள் எழுதி வைத்து கொண்டு வரிசையாக நின்றிருந்தனர். காலையில் விண்ணப்பம் விநியோகம் தொடங்கியதும் அவர்கள் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். விண்ணப்பம் பெற இரவே வர வேண்டாம் என பள்ளி நிர்வாகம் அறிவித்தும் நள்ளிரவு முதலே பெற்றோர் பள்ளி வாசலில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க ஆர்வம்: உணவுடன் நள்ளிரவே பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர் appeared first on Dinakaran.

Tags : Palayamkot ,private school ,Tirunelveli ,LKG ,Palayangottai ,Loyola Convent Primary School ,private ,Dinakaran ,