×

இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் உரிமையை பாதிக்கும் : அமெரிக்க நாடாளுமன்றம் கவலை

வாஷிங்டன் : இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் உரிமையை பாதிக்கும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஆர்எஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சுயாதீன ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி 2014ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த ஆவணம் மற்ற முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதற்கு இது வழிவகுக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வ மதச் சார்பற்ற குடியரசு என்ற இந்தியாவின் நிலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் கடமைகளை மீறும் வகையில் உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சில விதிகள் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பாதிக்கக்கூடும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் சுயாதீன ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சுயாதீன ஆய்வுக்குழு, சர்வதேச விவகாரங்களில் அமெரிக்க நாடாளுமன்றம் முடிவெடுப்பதற்கு உதவும் வகையில், அறிக்கைகளை தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாக்கம் குறித்து கவலை தெரிவித்த அதிபர் ஜோபிடன் நிர்வாகம், இந்தியாவில் அதன் தாக்கங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் உரிமையை பாதிக்கும் : அமெரிக்க நாடாளுமன்றம் கவலை appeared first on Dinakaran.

Tags : India ,US Parliament ,Washington ,Independent Study Group ,CRS ,Indian Parliament ,Dinakaran ,
× RELATED ஸ்டேன் சுவாமி மரணத்தில் சுதந்திரமான...