திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 107 டிகிரி வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவு வெயிலானது சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவர் கல்லூரியிலிருந்து வாணியம்பாடி பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது முன்பக்க பெட்ரோல் டேங்க் அருகே தீ பரவியது. தீ பரவிய உடன் வாகனத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் நிறுத்திவிட்டார். வாகனத்தை நிறுத்தியவுடன் தீயானது மளமளவென பரவி இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்து கொண்டிருந்தபோது இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த இருசக்கரவாக தீயை தண்ணீர் விட்டு அணைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது பெட்ரோல் டேங்கில் அதிகளவில் பெட்ரோல் நிரம்பியிருந்த காரணத்தினால் உஷ்ணத்தின் அடிப்படையில் தீ பரவி இந்த விபத்து நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருப்பத்தூரில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலையில் தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனத்தால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.