×

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்வதே இலக்கு: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வென்ற குகேஷ் உறுதி

கனடா: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெறுவதே தன்னுடைய இலக்கு என்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

*உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுவதே எனது அடுத்த இலக்கு

*இதற்காக சரியாக திட்டமிட்டு, அதற்கேற்ப வியூகங்கள் வகுத்து, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

*எல்லாம், இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்.

* விஸ்வநாதன் ஆனந்த் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து வருகிறார். அவர் சிறந்த ரோல் மாடல் மட்டுமல்ல.

*ஏராளமான இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்து வருகிறார். அவர்களின் வளர்ச்சியில் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்.

* உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியைப் பற்றி இப்போது எதுவும் நினைக்கவில்லை.

* அந்தப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. அதனால், விரைவில் அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்குவேன்.

* என்னால் முடிந்தவரை எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் கூறினார்.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்வதே இலக்கு: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வென்ற குகேஷ் உறுதி appeared first on Dinakaran.

Tags : World Chess Championship ,Gukesh ,Candidates Chess Series ,Canada ,Nadu ,World Chess Championship Series ,Dinakaran ,
× RELATED சி ல் லி பா யி ன் ட்…