×

டீப் ஃபேக் வீடியோவால் அரசியல் சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்; போலீசார் விசாரணை..!!

டெல்லி: டீப் ஃபேக் வீடியோவால் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அரசியல் சர்ச்சையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு சென்ற போது, ரன்வீர் சிங் பேசியதாக பரவிய வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், சமீபத்தில் வாரணாசி பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கும்போது, அங்குள்ள நிலைமைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் அவர் பேசிய கருத்துக்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு அரசியல் கருத்துக்கள் முன்வைப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.

பாஜகவை விமர்சித்து, காங்கிரஸுக்கு ஆதரவாக ரன்வீர் சிங் பேசியது போன்று டீப் ஃபேக் வீடியோ சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் இருந்த காட்சிகள் உண்மையாக இருந்தாலும், டீப் ஃபேக் மூலம் குரல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக, ரன்வீர் சிங்கின் செய்தி தொடர்பாளர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் அமீர் கானின் டீப் ஃபேக் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The post டீப் ஃபேக் வீடியோவால் அரசியல் சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்; போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Ranveer Singh ,Deep Fake ,Delhi ,Modi ,Varanasi ,
× RELATED ராக்கி சாவந்துக்கு செக்ஸ் டார்ச்சர்...