×

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்த கோடை கால வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலத்தில் வெப்ப அலை வீசக்கூடும். வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியசாக பதிவானது, மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

The post தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Heat wave ,Tamil Nadu ,Indian Meteorological Centre ,Delhi ,Indian Meteorological Survey ,wave ,Indian Weather Centre ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 6ம் தேதி வரை வெப்ப அலை: 5 நாட்களுக்கு கோடை மழை