×
Saravana Stores

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயில் வசந்த உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தங்க தேரில் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடம் தோறும் 480க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடைபெறுகிறது. இதில் வசந்த காலம் என்று அழைக்கக்கூடிய கோடை காலத்தில் வசந்த உற்சவம் நடை பெறுவது வழக்கம். சித்திரா பௌர்ணமி நாள் அன்று நிறைவு பெரும் விதமாக இந்த வசந்த உற்சவம் நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அவ்வாறு 21.04.2022 தொடங்கிய இந்த உற்சவம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ளது. இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சபையேர மலையப்ப சாமி தாயார்களுடன் வந்து எழுந்தருளி தங்க தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதிகளில் வளம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்தார். அதன் பிறகு இன்று மதியம் அர்ச்சகர்கள் முன்னிலையில் பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சலமானது நடைபெற உள்ளது.

வழக்கமாக தங்க தேரில் வீதியுலா வருவது ஆண்டுக்கு 3 நாட்கள் மட்டுமே, ஒன்று வருடாந்தர பிரமோற்சவத்தின் 5வது நாட்கள் மற்றும் ஆணிவாரா அஸ்தானம், வசந்த உற்சவம் உள்ளிட்ட 3 நாட்கள் மட்டுமே தங்கத்தேரில் தாயார் மற்றும் மலையப்பசாமி வீதியுலா வானது நடைபெறுவது வழக்கம் எனவே இன்று தங்க தேரில் சாமி வீதி உலாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டுள்ளனர். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் 4 மடவீதியில் சாமி வீதியுலா நடைபெற்றது.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி appeared first on Dinakaran.

Tags : Spring Festival ,Tirupati Eyumalayan Temple ,Sridevi ,Bhudevi ,Andhra ,Malayappasamy ,Budevi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத உற்சவங்கள் அறிவிப்பு