×

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!!

சென்னை: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘பிடே’ கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 13வது சுற்றுகளின் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தார்.

நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா தலா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் நகருராவை கருப்புநிற காய்களுடன் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய குகேஷ் இந்த ஆட்டத்தை டிரா செய்தார். இதன் மூலம் அவர் 9 புள்ளிகளை பெற்றார். மறுபுறம் நெபோம்நியாச்சி – பேபியானோ காருனா இடையிலான ஆட்டமும் டிரா ஆனதால் குகேஷ் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளார்.

மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் அவர்கள் மிக இளம் வயதில் கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,KUKESH ,Chennai ,Candidates Chess ,Bite' Candidates International Chess Tournament ,Toronto, Canada ,Dinakaran ,
× RELATED மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்