×

எதிர்பார்ப்புகளை தாண்டிய வரி வருவாய்: 2023-24ல் ரூ.19.58 லட்சம் கோடி நேரடி வரி வருவாய்.. முந்தைய ஆண்டை விட 17.7% அதிகம்..!!

டெல்லி: ஒன்றிய அரசின் நிகர வரி வருவாய் எதிர்பார்ப்புகளை தாண்டி உயர்ந்து இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.19.58 கோடி நேரடி வரி வருவாய் வசூல் இருந்ததாகவும் இது முந்தைய ஆண்டை விட 17.7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைக்கால பட்ஜெட்டில் நேரடி வரி வசூல் ரூ.19.45 லட்சம் கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கூடுதலாக ரூ.19.58 கோடி கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வருமான வரி மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து கார்ப்பரேட் வரி வசூல் அதிகரித்ததே ஒட்டுமொத்த வருவாய் அதிகரிக்க காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மறைமுக வரி வசூலும் எதிர்பார்ப்புகளை தாண்டி ரூ.14.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எதிர்பார்ப்புகளை தாண்டிய வரி வருவாய்: 2023-24ல் ரூ.19.58 லட்சம் கோடி நேரடி வரி வருவாய்.. முந்தைய ஆண்டை விட 17.7% அதிகம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,EU government ,finance ,Dinakaran ,
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...