×

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!

கனடா: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் படைத்துள்ளார். 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை குகேஷ் வென்றார். கேன்டிடேட் சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 13வது சுற்றுகளின் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தார். நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா தலா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் நகருராவை கருப்புநிற காய்களுடன் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய குகேஷ் இந்த ஆட்டத்தை டிரா செய்தார்.

இதன் மூலம் அவர் 9 புள்ளிகளை பெற்றார். மறுபுறம் நெபோம்நியாச்சி – பேபியானோ காருனா இடையிலான ஆட்டமும் டிரா ஆனதால் குகேஷ் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டார். முடிவில் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் 17 வயது வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளார். குகேஷ் தொடரை வென்றதன் மூலம் உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் தகுதியைப் பெற்றார்.

The post கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Grand Master Gukesh ,Candidates Chess Series ,Canada ,Tamil Nadu Grand Master ,Kukesh ,Candidate International Chess ,Gukesh ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...