- பாஜக
- காஷ்மீர்
- தேசிய
- மாநாட்டில்
- காங்கிரஸ்
- ஜம்மு
- யூனியன் பிரதேசம்
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- உதம்பூர்
- ஸ்ரீநகர்
- பாரமுல்லா
- பிடிபி
- தேசிய மாநாடு
- தின மலர்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் ஜம்மு,உதம்பூர், ஸ்ரீநகர்,பாரமுல்லா உள்பட 5 தொகுதிகள் உள்ளன. இதில், ஜம்மு, உதம்பூர் தொகுதிகளில் மட்டும் பாஜ போட்டியிடுகிறது. மீதி உள்ள 3 தொகுதிகளில் பாஜ போட்டியிடவில்லை. பாஜவின் இந்த முடிவுக்கு காங்கிரஸ்,பிடிபி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பாஜவை கடுமையாக விமர்சித்துள்ளன. இதுகுறித்து முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா, ‘‘ கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளிலும் பாஜ போட்டியிட்டது. ஆனால்,முதலில் மக்களின் மனங்களை வெல்வோம், அதன் பின்னர் வேட்பாளர்களை நிறுத்துவோம் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். இதில் இருந்து, அவர்களால் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை என தெரிகிறது. 2019ம் ஆண்டில் எடுத்த ஒன்றிய அரசின் முடிவுகளால் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்பது உறுதியாகிறது’’ என்றார். இது பற்றி காஷ்மீர் பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா,‘‘ மிக பெரிய லட்சியங்களை அடைவதற்கு இதுபோன்ற சில முடிவுகள் எடுக்க வேண்டி வரும். இந்த 3 தொகுதிகளிலும் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது என்றார்.
The post காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜ போட்டி இல்லை: தேசிய மாநாடு, காங். உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் appeared first on Dinakaran.