×

சில்லி பாய்ன்ட்…

* போர்ஷே கிராண்ட் பிரீ ரைபாகினா சாம்பியன்
ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக் (21 வயது, 27வது ரேங்க்) உடன் நேற்று மோதிய ரைபாகினா (24 வயது, 4வது ரேங்க்) 6-2, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் ரைபாகினா வென்ற 3வது பட்டம் இது. களிமண் தரை மைதானங்களிலும் தனது 3வது சாம்பியன் பட்டத்தை வசப்படுத்திய ரைபாகினா, இதுவரை மொத்தம் 8 பட்டங்களை வென்றுள்ளார்.
* முன்னாள் நம்பர் 1 வீராங்கனையும் 2 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பினி முகுருசா (30 வயது, வெனிசுலா), டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த முகுருசா, ஓராண்டுக்கும் மேலாக களமிறங்காமல் ஓய்வெடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
* ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதியில் ஒடிஷா எப்சி – மோகன் பகான் சூப்பர் ஜயன்ட், எப்சி கோவா – மும்பை சிட்டி எப்சி அணிகள் மோத உள்ளன. புவனேஸ்வரில் நாளை நடக்க உள்ள முதல் கட்ட அரையிறுதியில் ஒடிஷா – மோகன் பகான், நாளை மறுநாள் கோவா நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் கோவா – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2ம் கட்ட அரையிறுதி ஆட்டங்கள் ஏப். 28, 29 தேதிகளிலும், இறுதிப் போட்டி மே 4ம் தேதியும் நடக்க உள்ளன.
* அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கால்பந்து தொடரில் நாஷ்வில்லி அணியுடன் மோதிய இன்டர் மயாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இன்டர் மயாமி கேப்டன் லியோனல் மெஸ்ஸி 2 கோல் போட்டு வெற்றிக்கு உதவினார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Porsche Grand Prix Rybakina ,Kazakhstan ,Elana Rybakina ,Stuttgart Open ,Germany ,Ukraine ,Marta Kostyuk ,Dinakaran ,
× RELATED விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா