×

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவு: இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

* 3 வது முறையாக பட்டியல் மாற்றியமைப்பு
* முதலிடத்தில் தர்மபுரி தொகுதி

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதிகளுக்கான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்குப்பதிவு 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 40 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு விவரங்கள் அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குப்பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணியளவில் தமிழகத்தின் இறுதி வாக்குப்பதிவு விவரத்தை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் 69.94 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவித்தது. இந்த முறை தர்மபுரி தொகுதியில் 81.48 சதவீத வாக்குகளும், குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீதமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. பொதுவாக, இறுதியாக வெளியிடப்படும் வாக்கு சதவீதம் என்பது ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை அதிகரிக்க தான் செய்யும். ஆனால் தமிழகத்தில் இந்த முறை 3 சதவீதம் வரை குறைந்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மூன்றாவது முறையாக தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தர்மபுரி மக்களவை தொகுதியில் 81.20 சதவீதம் வாக்குகளும், அதேசமயம் குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கடந்த மக்களவை தேர்தல்களை விட வாக்குப்பதிவிற்கான சதவீதம் குறைந்துள்ளது. மேலும், தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர். குறிப்பாக 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 72.47 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை குறைந்த அளவே வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்குப்பதிவு பட்டியல்
மாவட்டம் வாக்காளர்கள் எண்ணிக்கை வாக்களித்தவர்கள் சதவீதம்
ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தார் மொத்தம் ஆண்கள் பெண்கள் இதர மொத்தம்
திருவள்ளூர் 10,24,149 10,61,457 385 20,85,991 7,32,795 7,06,852 91 14,30,738 68.59%
வடசென்னை 7,30,395 7,65,286 543 14,96,224 4,51,334 4,47,884 149 8,99,367 60.11%
தென்சென்னை 10,00,851 10,21,818 464 20,23,133 5,52,089 5,43,842 95 10,96,026 54.17%
மத்திய சென்னை 6,67,465 6,82,241 455 13,50,161 3,70,660 3,57,819 135 7,28,614 53.96%
ஸ்ரீ பெரும்புதூர் 11,80,263 12,01,427 429 23,82,119 7,30,030 7,05,159 54 14,35,243 60.25%
காஞ்சிபுரம் 8,53,456 8,95,107 303 17,48,866 6,31,966 6,21,533 83 12,53,582 71.68%
அரக்கோணம் 7,60,345 8,02,361 165 15,62,871 5,73,782 5,85,605 54 11,59,441 74.19%
வேலூர் 7,40,222 7,87,838 213 15,28,273 5,48,787 5,74,826 102 11,23,715 73.53%
கிருஷ்ணகிரி 8,14,076 8,08,798 305 16,23,179 5,,87,007 5,73,412 79 11,60,498 71.50%
தருமபுரி 7,70,897 7,53,820 179 15,24,896 6,23,846 6,14,248 90 12,38,184 81.20%
திருவண்ணாமலை 7,54,533 7,78,445 121 15,33,099 5,58,720 5,79,343 39 11,38,102 74.24%
ஆரணி 7,34,341 7,61,673 104 14,96,118 5,59,607 5,73,874 39 11,33,520 75.76%
விழுப்புரம் 7,44,350 7,58,545 220 15,30,115 5,69,148 5,80,917 99 11,50,164 76.52%
கள்ளக்குறிச்சி 7,73,526 7,94,927 228 15,68,681 5,98,501 6,44,033 63 12,42,597 79.21%
சேலம் 8,28,152 8,30,307 222 16,58,681 6,55,596 6,40,780 105 12,96,481 78.16%
நாமக்கல் 7,08,317 7,44,087 158 14,52,562 5,53,702 5,82,290 77 11,36,069 78.21%
ஈரோடு 7,44,927 7,93,667 184 15,38,778 5,31,889 5,54,311 87 10,86,287 70.59%
நீலகிரி 6,87,552 7,40,742 93 14,28,387 4,97,180 5,16,193 37 10,13,410 70.95%
கோவை 10,41,349 10,64,394 381 21,06,124 6,79,360 6,87,108 129 13,66,597 64.89%
பொள்ளாச்சி 7,73,433 8,23,738 296 15,97,467 5,50,379 5,74,275 89 11,24.743 70.41%
திண்டுக்கல் 7,80,074 8,26,759 218 16,07,051 5,58,823 5,84,318 55 11,43,196 71.14%
கரூர் 6,93,730 7,35,970 90 14,29,790 5,41,178 5,84,007 56 11,25,241 78.70%
திருச்சி 7,57,130 7,96,616 239 15,53,985 5,12,150 5,36,844 99 10,49,093 67.51%
பெரம்பலூர் 7,01,400 7,44,807 145 14,46,352 5,32,402 5,87,418 61 11,19,881 77.43%
கடலூர் 6,93,353 7,19,178 215 14,12,746 4,97,000 5,28,205 93 10,25,298 72.57%
சிதம்பரம் 7,53,643 7,66,118 86 15,19,847 5,56,930 6,03,805 27 11,60,762 76.37%
மயிலாடுதுறை 7,59,937 7,85,559 72 15,45,568 5,25,529 5,57,693 21 10,83,243 70.09%
நாகப்பட்டினம் 6,57,857 6,87,181 82 13,45,120 4,63,917 5,03,752 25 9,67,694 71.94%
தஞ்சாவூர் 7,27,166 7,73,932 128 15,01,226 4,82,135 5,42,778 36 10,24,949 68.27%
சிவகங்கை 8,02,283 8,31,511 63 16,33,857 4,82,427 5,67,450 10 10,49,887 64.26%
மதுரை 7,77,145 8,24,928 198 15,82,271 4,85,989 4,95,607 54 9,81,650 62.04%
தேனி 7,97,201 8,25,529 219 16,22,949 5,51,554 5,81,900 59 11,33,513 69.84%
விருதுநகர் 7,33,217 7,68,520 205 15,01,942 5,13,562 5,41,016 56 10,54,634 70.22%
ராமநாதபுரம் 8,02,317 8,15,292 79 16,17,688 5,10,769 5,92,247 20 11,03,036 68.19%
தூத்துக்குடி 7,13,388 7,44,826 216 14,58,430 4,72,056 5,03,325 87 9,75,468 66.88%
தென்காசி 7,46,715 7,78,509 215 15,25,439 4,94,529 5,37,365 67 10,31,961 67.65%
நெல்லை 8,08,127 8,46,225 151 16,54,503 5,13,441 5,46,963 57 10,60,461 64.10%
கன்னியாகுமரி 7,77,484 7,80,288 143 15,57,915 4,88,701 5,30,789 42 10,19,532 65.44%
மொத்தம் 3,06,05,793 3,17,19,665 8467 6,23,33,925 2,12,97,903 2,21,58,256 2716 4,34,58,875 69.72%

The post நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவு: இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Lok Sabha ,Election Commission of India ,Dharmapuri ,Chennai ,Puducherry Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED நீலகிரி, ஈரோட்டை தொடர்ந்து...