×

சட்டீஸ்கரில் நக்சல் சுட்டு கொலை

பிஜப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சல் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். சட்டீஸ்கரின் கங்கர் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 29 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பைரம்கர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கேஷ்குதுல் பகுதி அருகே காட்டில் நக்சல்கள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைந்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதம், வெடிபொருள்களை மீட்ட பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

The post சட்டீஸ்கரில் நக்சல் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Naxal ,Chhattisgarh ,Bijapur ,Naxals ,Kangar district ,Dinakaran ,