×
Saravana Stores

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு: கனகாம்பரம் கிலோ ரூ.1,200

சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1,200க்கு விற்கப்பட்டது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பூ வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ரோஜா மலர்கள் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதன் காரணமாக கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், நாளை (23ம் தேதி) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ மல்லி ரூ.450, முல்லை, ஜாதிமல்லி ரூ.350, சாமந்தி, அரளிப்பூ ஆகியவை ரூ.250, சம்பங்கி ரூ.400, பன்னீர் ரோஸ் ரூ.120, சாக்லேட் ரோஸ் ரூ.140 என விலை உயர்ந்து விற்பனையானது. இதில், அதிகபட்சமாக கனகாம்பரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனையானது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் சங்க துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், நாளை சித்ரா பவுர்ணமி மற்றும் முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்து நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகளும், பூ வியாபாரம் அமோகமாக நடந்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

The post சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு: கனகாம்பரம் கிலோ ரூ.1,200 appeared first on Dinakaran.

Tags : Chitra Pournami ,Koyambedu ,CHENNAI ,Chitra Poornami ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Ranipettai ,Vellore ,Madurai ,
× RELATED கோயம்பேடு பேருந்து நிலையத்தில்...