- கிளம்பக்கம் நகராட்சி பஸ்
- சி.எம்.டி.ஏ
- சென்னை
- கலயங்கர் நூற்றாண்டு
- பேருந்து
- நிற்க
- கிளம்பாக்
- கிளம்பக்கம் நகர பேருந்து நிலையம்
- தின மலர்
சென்னை: கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை தினமும் 80,000 பேர் பயன்படுத்தி வருகின்றனர். மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல அரசு சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எளிதில் செல்லும் வகையில் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையத்திற்கு புதிய பாதை அமைக்கப்படுவதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில், கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு தற்போது லிப்ட், நகரும் படிக்கட்டுகளுடன் சுரங்கப்பாதை உள்ளது. மக்கள் அதிகமாக இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதால் சில பயணிகள் உடமைகளை எடுத்து செல்ல சிரமம் உள்ளது என தகவல் கிடைத்தது. இந்நிலையில் மக்கள் பயணத்தை எளிதாக்க புதிதாக படிக்கட்டுகள் மற்றும் சாய்வு தளம் அமைக்கப்பட இருக்கிறது என்றனர்..
The post கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலையத்திற்கு புதிய பாதை: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.