சென்னை: பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர் கல்வியில் இளநிலை பட்டப்படிப்பில் 4 ஆண்டு படித்த மாணவர்கள் நேரடியாக தேசிய தகுதித் தேர்வு (என்இடி) எழுத முடியும். மேலும், நேரடியாக பிஎச்டி படிப்பையும், ஜெஆர்எப் என்னும் இளநிலை ஆய்வு பட்டப்படிப்பிலும் தொடர முடியும். இதற்காக மாணவர்கள் தங்கள் 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 75% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பும் படித்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இதுவரை இருந்தது. ஆனால், இப்போது 4 ஆண்டு இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாகவே பிஎச்டியில் சேர முடியும்.
தேசிய தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியும். இந்த தகுதி பெற்ற மாணவர்கள் பிஎச்டி படிப்பில் தாங்கள் விரும்பிய பாடத்தில் சேர்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான கிரேடுகளை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் இதற்கு அடிப்படை தகுதி. இந்நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் பிற பிரிவினருக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவின்படி 5% மதிப்பெண்கள் அல்லது அதற்கு நிகரான மதிப்பெண் தளர்வு அவ்வப்போது அனுமதிக்கப்பட வேண்டும்.
The post இளநிலை பட்டப்படிப்பில் 75% மதிப்பெண் பெற்றால் பிஎச்டியில் சேரலாம்: யுஜிசி அறிவிப்பு appeared first on Dinakaran.