×

வாக்கு எண்ணிக்கை – அதிகரிக்கும் வெயிலால் பள்ளிகளுக்கு விடுமுறையை ஒரு வாரம் நீட்டிக்க முடிவு

சென்னை: அதிகரிக்கும் வெயில் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டின் இறுதிப் பணி நாள் வரும் 26ம் தேதியுடன் முடிவடைவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளிகள் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த 13ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்றும், நாளையும் 9ம் வகுப்புக்கு விடுபட்ட அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடக்கும். 24ம் தேதி முதல் தொடர்ந்து கோடை விடுமுறையாகும். மேலும், 24, 25, 26ம் தேதி வரை பள்ளிகள் நடக்கும். 26ம் தேதி இந்த கல்விஆண்டில் கடைசி பணி நாளாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கு பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் ெதாடங்க உள்ளதால் ஜூன் 3ம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி தொடங்க உள்ளது. அதே நேரத்தில் கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பள்ளிகளை திறப்பது மேலும் ஒரு வாரம் ஒத்திப் போக வாய்ப்புள்ளது.

The post வாக்கு எண்ணிக்கை – அதிகரிக்கும் வெயிலால் பள்ளிகளுக்கு விடுமுறையை ஒரு வாரம் நீட்டிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Department ,
× RELATED அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை