×
Saravana Stores

மிஸ்கூவாகமாக சென்னை திருநங்கை தேர்வு

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் சென்னை திருநங்கை நாயக்குகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் கூவாகம் திருவிழா 2024க்குக்கான அழகிப் போட்டி நேற்று மாலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சினிமா நடிகர் காந்த், நடிகை அம்பிகா, நடிகை தீபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் 22 திருநங்கைகள் முதல் கட்ட போட்டியில் திறமையை வெளிப்படுத்தினர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 7 பேருக்கு கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. அதில் பெண்மையை உணர்வது, பெண்மை குறித்த பார்வை போன்ற கருத்துகளை கேட்டனர். அதற்கு பதில் அளித்ததின் அடிப்படையில் 3 பேரை இறுதியாக வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்தனர். 3ம் இடத்தை தூத்துக்குடியை சேர்ந்த சுபப்பிரியா, 2ம் இடத்தை புதுச்சேரியை சேர்ந்த வர்ஷா ஷெட்டி, முதல் இடத்தை சென்னையை சேர்ந்த ஷம்தி என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை திருநாயக்குகள் அமைப்பினர் கிரீடம் மற்றும் மலர் கொத்தும் வழங்கி கவுரவித்தனர்.

The post மிஸ்கூவாகமாக சென்னை திருநங்கை தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Villupuram ,Koovagam Festival 2024 ,Chennai Transgender Nayaks ,Villupuram New Bus Stand ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு