×

தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜ பிரமுகர் மீது தாக்குதல்: பார்வையாளர் கைது

டிகம்கர்: மத்திய பிரதேசத்தில் தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜ பிரமுகர் மீது நாற்காலியை வீசி தாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார். இன்னொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், டிகம்கர் மாவட்டம் நஸர்பாக் என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் தனியார் ஊடகம் சார்பில் தேர்தல் விவாதம் நடந்தது. காங்கிரஸ்,பாஜ மற்றும் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ஹிமான்சு திவாரி,பாபர் ஆகியோர் பாஜவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமர் மோடியை பற்றி மிகவும் அவதூறான கருத்துகளை தெரிவித்தனர். இதற்கு மாவட்ட பாஜ தலைவர் பிரபுல் திவேதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த 2 நபர்களும் திவேதி மீது நாற்காலியை வீசி தாக்கினர். இதையடுத்து உள்ளூர் தலைவர்கள் விரைந்து வந்து திவேதியை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர். திவேதி அளித்த புகாரின் பேரில் பாபரை காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவான திவாரியை தேடி வருகின்றனர்.

The post தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜ பிரமுகர் மீது தாக்குதல்: பார்வையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Digamgarh ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?