×
Saravana Stores

முதுமலை முகாமில் குழந்தையை போல் உறங்கிய தாயை பிரிந்த குட்டி யானை

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரன்யம் முகாம்களில் தற்போது 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து வரும் குட்டி யானைகளுக்கு இங்கு சிறப்பு பராமரிப்பு அளிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன. தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த 2 மாதங்களுக்குள் 2 குட்டி யானைகள் தாயை பிரிந்த நிலையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயை பிரிந்த 3 மாத பெண் குட்டி யானை முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது.  இதனைத்தொடர்ந்து, கடந்த மாதத்தில் கோவை வனச்சரகம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டியானை முதுமலைக்கு பராமரிப்பிற்காக கொண்டு வரப்பட்டது.

இந்த இரு குட்டி யானைகளுக்கும் ஒரு பாகன் மற்றும் தலா 2 உதவியாளர் நியமிக்கப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட குட்டி யானை நேற்று குழந்தையை போல் உறங்கி ஓய்வெடுத்து கொண்டு இருந்தது. இந்த காட்சி முகாமில் உள்ளவர்களை பரவசப்படுத்தியது.

The post முதுமலை முகாமில் குழந்தையை போல் உறங்கிய தாயை பிரிந்த குட்டி யானை appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Mudumalai Tiger Reserve Theppakkad ,Theppakadu ,
× RELATED இருசக்கர வாகனத்தை விரட்டிய...