உடுமலை: உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது கோடை துவங்கிவிட்டதால், வனத்தில் வறட்சி நிலவுகிறது.
இதனால், யானைகள் தண்ணீர் தேடி மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றன. ஒற்றை யானையும் சாலையில் நிற்கிறது. சில நேரம் சாலையிலேயே நிற்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் காத்திருந்து யானைகள் சென்றபின் செல்கின்றனர்.
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், “தற்போது யானைகள் அதிகளவில் சாலையை கடந்து செல்லும். வாகன ஓட்டிகள் ஹாரன் அடிப்பது, செல்போனில் படம் பிடிப்பது, கூச்சலிடுவது என தொந்தரவு செய்யக்கூடாது. அமைதி காத்தால் சிறிது நேரத்தில் தானாகவே யானைகள் காட்டுக்குள் சென்றுவிடும். வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும்” என்றனர்.
The post மூணாறு சாலையில் உலா வந்த காட்டு யானை appeared first on Dinakaran.