×

காவேரிப்பாக்கத்தில் வெயில் சுட்டெரிப்பதால் விதைகளின் முளைப்பு திறன் அதிகரிக்க வைக்கோலை மூடி பாதுகாக்கும் விவசாயிகள்

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நவரைப் பருவத்தை நிறைவு செய்து, கோடை பருவத்தில் கோ-51, 55, ஏடிடி 37, மகேந்திரா 606, ஆர்என்ஆர் உள்ளிட்ட நெல் ரகங்கள் விதை விதைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பயிருக்கு தேவையான அடி உரங்கள் யூரியா, டிஏபி, காம்ப்லெக்ஸ், உள்ளிட்ட மருந்துகளை பயிருக்கு உரமாக இட்டு விவசாயம் செய்ய தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் கோடைக்காலப் பருவத்தில் விவசாயிகள் விதை விதைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 105-டிகிரி தாண்டி உள்ள நிலையில், விதைகளின் முளைப்பு திறன் பாதித்து கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் விவசாயிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து விதைகளின் முளைப்பு திறனை அதிகரிக்க, வைக்கோல் மூலம் மூடி பாதுகாத்து வருகின்றனர்.

பின்னர் விதைகள் முளைப்பு திறன் அதிகரித்தவுடன், விவசாயிகள் விதையின் மேல் பகுதியில் உள்ள வைக்கோலை எடுத்து விடுகின்றனர். மேலும், நாற்றங்கால் மற்றும் வயலில் எலிகள் தாக்குதல் மற்றும் காட்டு பன்றிகள் தாக்குதல் காணப்படுகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் வரப்பின் ஓரங்களில், வெள்ளை பிளாஸ்டிக் மற்றும் வேட்டி, பனை ஓலை, புடவைகள், ஒலி எழுப்பும் அளவுக்கு மரக்கிளைகளில் பாட்டில் கட்டி வைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காவேரிப்பாக்கத்தில் வெயில் சுட்டெரிப்பதால் விதைகளின் முளைப்பு திறன் அதிகரிக்க வைக்கோலை மூடி பாதுகாக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Kaveripakkam ,Ranipet district ,Navar ,Cauverypakkam ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...