×
Saravana Stores

கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6 ,369 சேவைகள் இயக்கப்பட்டன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

அந்த வகையில், தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் 239 சேவைகளாக இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து தெற்கு ரயில்வே மூலம் கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், டெல்லி, மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன

அதன்படி சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு பயணிகளின் வசதிக்காக தேர்தலையொட்டி சிறப்பு ரயில்களையும் அறிவித்துள்ளது. மேலும், இதைத்தவிர பல புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2023-ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6,369 சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2,742 சேவைகள் இயக்கப்பட உள்ளது. கோடை காலங்களில் ரயில் நிலையங்களில் குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய மண்டல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

அனைத்து முக்கியமான ரயில் நிலையங்களில் விரிவான கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாகவும் பயணிகள் டிக்கெட் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Southern Railway Information ,Chennai ,Southern Railway ,India ,Dinakaran ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு