- சித்ராய் திருவிழா
- திருவையாறு
- ஐயரப்பர்
- வேதி உல்லா
- தஞ்சாவூர்
- Thiruvaiyar
- திருவோலக மண்டபம்
- ஆரம்வலர்தா
- நாயகி அம்மன்
- தாருமை அத்தீனம்
- ஐயாரப்பர் சன்னிதி
- திருவையாரு கோயில்
- ஐயரப்பர்
தஞ்சாவூர், ஏப். 21: திருவையாறில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா 5ம் நாள் விழாவில் திருவோலக்க மண்டபத்தில் தன்னைத்தான் பூஜித்தல் விழா நடந்தது. ஐயாறப்பர் சந்நிதி முன்பு மரகதலிங்கத்திற்கு பால், தேன், மஞ்சள், சந்தனம், பழம் போன்ற திரவிய பொருட்களை கொண்டு மேளதாள, நாதஸ்வர இன்னிசையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்க கள் முழங்க அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து எழுந்தருளி சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜையும் நடந்தது.
பின்னர் ஐயாறப்பர் அம்பாள் யானை வாகனத்தில் பாவ சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து நான்கு முக்கிய வீதிகளில் வழியாக மேளதாளம் முழங்க வீதி உலா காட்சி நடைபெற்று மீண்டும் சன்னதியை வந்து அடைந்தது.
பின்னர் நான்கு முக்கிய வீதிகளின் வழியாக வாண வேடிக்கையுடன் மேள தாள இன்னிசை முழங்க வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 22ம் தேதி பஞ்சரத தேரோட்டமும், 25ம் தேதி காலை 5.30 மணிக்கு சப்தஸ்தான விழாவில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் விசித்திர கண்ணாடி சிவிகையில் ஏமூர் வலம் வருதலும், 26ம் தேதி இரவு தேவர்கள் பூச்சொரிதல் பொம்மை பூ போடும் ஆனந்த காட்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ல கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அறிவுறுத்தலின்படி ஐயாறப்பர் கோவில் கட்டளை விசாரணை மத் சொக்கலிங்க தம்பிரான் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
The post திருவையாறு கோயிலில் சித்திரை திருவிழா யானை வாகனத்தில் ஐயாறப்பர் வீதியுலா appeared first on Dinakaran.