×

தர்மபுரியில் செந்தூரா மாம்பழம் வரத்து அதிகரிப்பு கிலோ ₹80க்கு விற்பனை

 

தர்மபுரி, ஏப்.21: தர்மபுரி நகருக்கு செந்தூரா மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ₹60க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டம் முழுக்க பெங்களூரா, நீலம், செந்தூரா, அல்போன்சா, பீத்தர், பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிக பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர வேறு சில ரகங்களும் குறைந்த பரப்பில் நடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மா அறுவடை துவங்காத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி, போச்சம்பள்ளி பகுதியில் இருந்து தர்மபுரி நகருக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு அதிகளவில் வரத்துவங்கியுள்ளன. தர்மபுரி மார்க்கெட்டில் செந்தூரா கிலோ ₹80, நீலம் மற்றும் பங்கனப்பள்ளி ₹100 என விற்பனையானது.

 

The post தர்மபுரியில் செந்தூரா மாம்பழம் வரத்து அதிகரிப்பு கிலோ ₹80க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sentura ,Bengaluru ,Neelam ,Alphonsa ,Pithar ,Panganapalli ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...