×

வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

ஆண்டிபட்டி, ஏப்.21: மதுரை சித்திரை திருவிழாவின் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவிற்காக வைகை அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா வருகிற 23ம் தேதி பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

திறக்கப்பட்ட முதல் நாள் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அடுத்தடுத்த நாட்களில் தண்ணீரை அளவை படிப்படியாக குறைத்து 23ம் தேதி மாலை 1 மணி தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 750 கன அடியாக குறைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 58.79 அடியாக உள்ளது.

The post வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Waigai Dam ,Andipatti ,Vaigai dam ,Kallagarhar Vaigai ,Madurai Chitrai festival ,Vaigai ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...