மதுரை, ஏப். 21: தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை விட வெப்பம் அதிகமாக இருக்க கூடும் என தமிழக பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் வெப்பக் காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படியே மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கோடை மழை லேசாக பெய்து மண்ணை குளிர செய்தது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. காலையிலேயே வெயிலின் தாக்கத்தினால் உடல் சூடு அதிகரித்து வியர்வை சுரக்க ஆரம்பிக்கிறது.
பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெய்யில் தாக்கம் உள்ளது. வீடுகளுக்குள் இருந்தாலும், அனல் காற்றின் தாக்கம் உள்ளது. எனவே வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் தினமும் குடிநீரை தினசரி அளவைக் காட்டிலும் கூடுதலாக பருக வேண்டும். டீ, கார்பனேட் குளிர்பானங்களை தவிர்த்து ஓஆர்எஸ் பவுடர், நீர் ஆகாரம், மோர், எலுமிச்சை சாறுகலந்த நீர் பானங்களை பருகிடலாம். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே பொதுமக்கள் செல்வதை தவிர்த்திட வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
The post சுட்டெரிக்கும் வெயிலால் பகலில் வெளிவர தயங்கும் மதுரை மக்கள் appeared first on Dinakaran.