- திருமங்கலை
- மதுரை
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
- பொறியாளர்
- திருமங்கலம் வடம், கோகலஞ்சேரி கிராமம்
- தின மலர்
மதுரை, ஏப். 21: திருமங்கலம் வட்டம், கொக்கலாஞ்சேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மூடக் கோரி 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டலப் பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
திருமங்கலம் அருகே கே.சென்னம்பட்டி, உன்னிப்பட்டி, ஓடைபட்டி, பேய்குளம், ஆவல்சூரன்பட்டி ஆகிய கிராமமக்கள் சுற்றுச்சூழல் பாதிக்கும் தனியார் உர ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்த ஐந்து கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இந்த சம்பவம் திருமங்கலம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் புறக்கணிப்புக்கு காரணமான தொழிற்சாலையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டலப் பொறியாளர் குணசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, தொழிற்சாலையை ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டலப் பொறியாளர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளார். அதில் தொழிற்சாலையின் வெளிப்புறங்களில் துர்நாற்றம் எதுவும் உணரப்படவில்லை. கெமிக்கல் கழிவுகளோ, மருத்துவக் கழிவுகளோ இத்தொழிற்சாலையில் கையாளப்படவில்லை. இத்தொழிற்சாலையானது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையே பின்பற்றி செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
The post திருமங்கலத்தில் தேர்தல் புறக்கணிப்புக்கு காரணமான தொழிற்சாலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.