×

பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

 

பழநி, ஏப். 21: பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் வரக்கூடிய முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். தற்போது பள்ளி கோடை விடுமுறையையொட்டி பழநி நகரில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் பக்தர்களின் நலன் கருதி பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக நகரில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களை சுகாதார ஆய்வாளர்கள் மூலம் சோதனை செய்து பறிமுதல் மற்றம் அபாரத நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani Nagar ,Palani ,Dandayuthapani ,Swamy Hill Temple ,Tamil Nadu ,
× RELATED பழநி பகுதியில் தொடர் மழை; நிரம்பி...