திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கே மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய போது 13 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு கருவியில் சிறு கோளாறு ஏற்பட்டது. மேலும் 7 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிறு குறைபாடும், 17 இடங்களில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவியில் பழுது,
மற்றும் திண்டுக்கல் மதுரை ரோட்டில் ஒரு வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக முகவர்கள் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. திண்டுக்கல் தொகுதியில் 4, நத்தம் தொகுதியில் 11, பழநி தொகுதியில் 11, நிலக்கோட்டை தொகுதியில் 6, ஒட்டன்சத்திரத்திரம் தொகுதியில் 4, ஆத்தூர் தொகுதியில் 2 என 38 வாக்குச்சாவடிகளில் சுமார் 15 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை வாக்குப்பதிவு தாமதமாக துவங்கப்பட்டது.
The post 38 பூத்களில் வாக்குப்பதிவு தாமதம் appeared first on Dinakaran.