×

அய்யம்பேட்டையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கும்பகோணம் : கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தாமோதர விநாயகர் கோயில் தெரு, ஆர்.எஸ்.ஜி நகரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், விவசாய கடன், பயிர் கடன் தொடர்பாகவும், ஆன்லைன் சேவை பணிக்காகவும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை வழியாக வடிந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இப்பகுதி சாலையை கடக்கும்போது, கடன் சங்கம் வரும்போதும் துணியால் மூக்கைப் பொத்திக் கொண்டு உள்ளே வருகின்றனர்.மேலும் இந்த சாலை வழியாக செல்லாமல், கடைத்தெரு பகுதிக்கு செல்ல மாற்று சாலைகளில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த வடிகால் வசதி ஏற்படுத்தி, தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அய்யம்பேட்டையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ayyambet-District Administration ,Kumbakonam ,Ayambpet ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா