×

நடிகர் விஜய் மீது தேர்தல் விதிமீறல் புகார்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நடிகர் விஜய் மதியம் 12.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக போலீசார் அவரை பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அவர் வாக்களித்தார். நடிகர் விஜய் வாக்களித்துவிட்டு திரும்பும் வரையில், வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு பெரும் இடையூறும் ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் நடந்துகொண்டதாக கூறி சென்னை காவல்துறையில் செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் வாக்களிக்க வரும் போது 200க்கும் மேற்பட்ட நபர்களை அத்துமீறி கூட்டுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட நடவடிக்கையில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார், மேலும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்தவர்களை அவமதித்து, வரிசையில் நின்று வாக்களிக்காமல் போலீசாரின் உதவியோடு தனது வாக்கை விஜய் அளித்துள்ளார், இதனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜயின் மீது தேர்தல் விதிகளை மீறியதாகவும், பொது மக்களக்கு தொல்லை அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

The post நடிகர் விஜய் மீது தேர்தல் விதிமீறல் புகார் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,Tamil Nadu ,Vethi ,Kazhagam ,president ,Chennai Police Commissioner ,Puducherry ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...