×

மலையாள டைரக்டர் ஜோஷியின் வீட்டில் ரூ.1 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளை

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் ஜோஷி. நியூ டெல்லி, டுவென்டி டுவென்டி, ஏர்போர்ட், ராபின் ஹூட், கிறிஸ்டியன் பிரதர்ஸ், ரன் பேபி ரன், உள்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இவர் இயக்கியுள்ளார். தமிழில் சத்யராஜ் நடித்த ஏர்போர்ட் என்ற படத்தை இவர்தான் இயக்கினார். ஜோஷியின் வீடு கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஜோஷி, அவரது மனைவி சிந்து மற்றும் குடும்பத்தினர் வீட்டில் வழக்கம்போல் தூங்கினர். நேற்று அதிகாலை 5 மணியளவில் சிந்து எழுந்தபோது வீட்டின் பின்பக்கத்திலுள்ள ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் மேல் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு பீரோ லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் வாட்சுகள் கொள்ளயடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக கொச்சி போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post மலையாள டைரக்டர் ஜோஷியின் வீட்டில் ரூ.1 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Joshi ,Thiruvananthapuram ,Satyaraj ,
× RELATED திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில்...