×

புலி தாக்கி யானை சாவு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்திப்பூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. இதனால், மனித-வனவிலங்கு மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பந்திப்பூர் வனப்பகுதியில் உலாவந்த இந்த யானையின் குட்டியை புலி தாக்கியதில் இறந்து உள்ளது.

அந்த புலியை மற்ற யானைகள் அங்கிருந்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. புலி தப்பிவிட்டதால் கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் காட்டு யானை ஒன்று இறந்த குட்டியுடன் சாலையில் நின்று வாகனங்களை விரட்டி உள்ளது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு வந்த வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை சிறிது நேரம் தடுத்து நிறுத்தினர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு இறந்த குட்டி யானையை மீட்டதோடு மீண்டும் யானை சாலைக்கு வராமல் கண்காணித்து வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தை வாகனங்களில் வந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

The post புலி தாக்கி யானை சாவு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Bandipur forest ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...