×
Saravana Stores

நிலம் தொடர்பான தகவல் தர மறுப்பு சார் பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சியைச் சேர்ந்தவர் குருசாமி. ஓய்வுபெற்ற அரசு சர்வேயரான இவர் தந்தை சுப்பையா பெயரில் அய்யநேரி சுபா நகரில் உள்ள நிலம் தொடர்பாக தகவலை கடந்த 2020ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 6 (1) கீழ் சில தகவல்களை மாவட்ட பதிவாளரிடம் கேட்டார்.

குருசாமி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கோவில்பட்டி சார் பதிவாளருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அப்போது கோவில்பட்டி சார்பதிவாளராக இருந்த பாஸ்கரன், குருசாமி கேட்ட கேள்விகளுக்கு பதிலாக மாறுபட்ட பதிலை கூறியுள்ளார்.இதனால் கடந்த 12.4.2021 அன்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பிரிவு புகார் செய்தார்.

இது, கடந்த 3ம் தேதி சென்னையில் விசாரணை நடத்திய ஆணையம், குருசாமிக்கு சரியான தகவல் தர மறுத்த அப்போதைய கோவில்பட்டி சார்பதிவாளரும், பொது தகவல் அலுவலருமான பாஸ்கரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது மட்டுமின்றி, அந்த தொகையை பாஸ்கரனிடம் வசூலித்து குருசாமியிடம் கொடுக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து தற்போதைய கோவில்பட்டி சார்பதிவாளர் சூசை ஜேசுதாஸ், பாஸ்கரனிடம் வசூலித்த ரூ.25 ஆயிரத்திற்கான வரைவோலையை (டி,டி) குருசாமியிடம் வழங்கினார்.

The post நிலம் தொடர்பான தகவல் தர மறுப்பு சார் பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Kuruswamy ,Inammaniachi ,Thoothukudi district ,Ayyaneri Suba Nagar ,Subpaiah ,
× RELATED கோவில்பட்டி நகராட்சி கூட்டம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்