- எடப்பாடி
- அஇஅதிமுக
- சென்னை
- சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்
- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சுமுகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,
சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், முகவர்களுக்கும், கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜுன் 4 வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரை வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.
The post எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும்: அதிமுகவினருக்கு எடப்பாடி வேண்டுகோள் appeared first on Dinakaran.